Advertisment

பங்களாவில் இருந்து நடிகை வனிதா வெளியேற்றம்! விஜயகுமாரிடம் சாவியை ஒப்படைத்த போலீஸ்!

வ

Advertisment

வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாக நடிகை வனிதா மீது விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் வனிதாவை பங்களாவில் இருந்து போலீசார் வெளியேற்றினர்.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயகுமாரின் மகளூம், நடிகையுமான வனிதா, இந்த பங்களாவை படப்பிடிப்பிற்கு வேண்டும் என்று வாடகை எடுத்துள்ளார். ஆனால், குறித்த நாட்கள் தாண்டியும் பங்களாவை காலி செய்யாமல் இந்த பங்களா தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடினார். அவருக்கு ஆதரவாக 8 நண்பர்கள் இருந்தனர். இதையடுத்து மதுரவாயல் காவல்நிலையத்தில் விஜயகுமார் புகார் தெரிவித்தார்.

போலீசார் விசாரணையில் இந்த பங்களா, விஜயகுமாரின் இன்னொரு மகளான நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து வனிதாவுக்கு ஆதரவாக இருந்த 8 பேரை கைது செய்தனர். மேலும், வனிதாவை பங்களாவை விட்டு வெளியேற்றினர். பங்களாவிற்கு பூட்டுபோட்டு விஜயகுமாரிடம் சாவியை ஒப்படைத்தனர் போலீசார்.

vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Subscribe