பிக்பாஸ் வீட்டில் இரவில் நடப்பது என்ன? உண்மையை உடைத்த வனிதா!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்களை கவர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 16 பிரபலங்கள் போட்டியாளர்களா கலந்துகொண்டார். இதில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

vanitha

இந்நிலையில் கடந்த வாரம் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவது, கத்துவது என நிகழ்ச்சியை பரபரப்பாக இருந்தார் வனிதா. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியே வந்த வனிதா யு-டியுப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார். அதில் 'பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும்' என்ற ரகசியத்தை கூறியுள்ளார். இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actress bigboss kamalhassan vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Subscribe