Published on 24/11/2023 | Edited on 24/11/2023

பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூரில் உள்ள ஒரு சின்ன ஆலயத்தில் பிரபல நடிகை சென்னையில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ. கஸ்பா பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் சனி பகவானை காலில் மிதித்தபடி காட்சி அளிக்கிறார். இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், ராகு, கேது தோஷம், சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமீபகாலமாக வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஷகிலா தனது குடும்பத்துடன் வந்து ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் விளக்கேற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.