Advertisment

விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா புழல் சிறையிலடைப்பு - மேலும் சில நடிகைகள் சிக்குகிறார்கள்

a s

Advertisment

பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வாணி ராணி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை சங்கீதா. இவர் நேற்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் நடன பெண் , துணை நடிகை உள்ளிட்ட 4 பேர் கைதானார்கள். மேலும் சுரேஷ் என்கிற நபரும் கைது செய்யப்பட்டார்.

sn

Advertisment

இவர்களை இன்று மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவை அடுத்து நடிகை சங்கீதாவை புழல் மத்திய சிறையிலும், மற்ற பெண்களை காப்பகத்திலும் அடைத்தனர் போலீசார்.

san

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி குழுவினர் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று காக்கிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

imprisonment Pooja Sangeetha
இதையும் படியுங்கள்
Subscribe