Advertisment

தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.

Advertisment

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

Vellore samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe