/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_169.jpg)
பேருந்தில் படிக்கட்டில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டுத்தாக்கிய புகாரில் நடிகை ரஞ்சனா கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் நேற்று முன்தினம் சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக மாணவர்கள் பயணித்தனர். அப்போது பேருந்தைநிறுத்திய நடிகை ரஞ்சனா, பேருந்திலிருந்து பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கிவிட்டு அவர்களைத்தாக்கினார். மேலும், படிக்கட்டில் பயணித்த மாணவர்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி பேருந்தின் நடத்துநரைத்தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களைத்தாக்கிய புகாரில் நடிகை ரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார். அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களைத்தாக்கியது, ஆபாசமாகப் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீசார் நடிகை ரஞ்சனாவை கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)