Advertisment

நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல்!

Actress Radha gets  threat

Advertisment

‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் ஏற்கனவே ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவரான எஸ்.ஐ. வசந்தராஜா தன்னுடையநடத்தையில் சந்தேகப்பட்டுஅடித்துத் துன்புறுத்தியதாக வழக்கு தொடுத்திருந்த நிலையில், மேலும் தற்போது, வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் கொடுப்பதாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகை ராதா ஏப்பரல் மாதம் கொடுத்த வழக்கிற்காக சென்னை அசோக்நகர் ஏ.சி. தனபால் தலைமையிலான விசாரணை17ஆம் தேதி தொடங்கியது. அந்த விசாரணையில் ராதாவை வசந்தராஜவுக்கு சாதகமாகப் பேச சொல்லியுள்ளார். ஆனால் அவருக்கு சாதகமாக விஷயத்தை சொல்லாமல், நடந்த விஷயங்களை அப்படியே சொல்லியுள்ளார் ராதா. இதனால் எஸ்.ஐ. வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தால் வசந்தராஜாநடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளாராம். மேலும், அடுத்தகட்ட விசாரணைநடக்க இருக்கும் நிலையில், “அதிலாவது எனக்குச் சாதகமாக சொல்லவில்லை என்றால் என்னுடைய வேலை போனபிறகு எனக்கு எதற்கு நீ தேவை?உன்னை என்ன செய்யணுமோ அதைச் செய்து முடித்துவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நடிகை ராதா,“போலீஸ் தரப்பு செய்த விசாரணையில் வசந்தராஜா என்னுடன் கணவனாக வாழ்ந்ததையும் அடித்துத் துன்புறுத்தியதும் உண்மைதான் என்று விசாரணையில் சொல்லியதால், அவருக்குச் சாதகமாகப் பேசவில்லை என்பதற்காக, ‘ரவுடி சம்பவ செந்தில் மற்றும் முனிவேல் இருவரும் என்னுடைய நண்பர்கள். அவர்களை வைத்து உன்னை அடையாளம் தெரியாமல் செய்துவிடுவேன்’ என மிரட்டினார். அதனால்தான் நான் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் அதன்படி வடபழனி மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. ரேணுகா என்னிடம் விசாரணை செய்தார். அவர்களிடம் இதையே சொன்னேன். எனக்கு எப்போ, எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது அப்படி நடந்தால் அதற்கு வசந்தராஜாதான் காரணம்” என்றார்.

Advertisment

இது தொடர்பாக எஸ்.ஐ. வசந்தராஜாவிடம் கேட்டபோது, “அதுபோன்று கொலை மிரட்டல் கொடுக்கவில்லை.என்னுடைய வேலைக்கு,அரசு வேலை அது கிடைப்பது அரிது என்று என்னுடைய வக்கீல்தான் கேட்டாங்களே தவிர, அதைக்கூட நான் கேட்கவில்லை. அவர் சொல்வதைப் போன்று அந்த ரவுடிகள் யார் என்றே எனக்குத் தெரியாது” என்றார்.மேலும், இது தொடர்பான வழக்கை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ரேணுகா விசாரணை செய்துவருகிறார்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe