தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஆ.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

actress-nayanthara-and-director-vignesh-shivan-visit-Temple

Advertisment

இதற்கிடையில் குமரியை சுற்றியுள்ள கோயிலுக்கு நயன்தாரா , இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த ஜோடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசிந்திரம் தாணுமாலையன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோவில் மற்றும் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டது.

Advertisment

actress-nayanthara-and-director-vignesh-shivan-visit-Temple

இந்நிலையில் நேற்று இரவு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் சுசிந்திரம் தாணுமாலையன் கோயிலுக்கு சென்றுள்ளது. அங்கு ஸ்ரீபலி பூஜைக்காக கோவில் மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அரை மணி நேரம் பக்தா்களோடு பக்தராக கோவில் தரையில் உட்காந்திருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நடை திறக்கப்பட்டதும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலை விட்டு வெளியேறும் போது ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதால், கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது.