இலவசமாக 6 கேஸ் சிலிண்டர் தருவோம்; அதில் பிரியாணி செய்து சாப்பிடுங்கள் - நமீதா ருசிகர பேச்சு!

dfg

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சியை சேர்ந்த நடிகர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, "பாஜகவுக்கு வாக்களித்தால் என்ன வந்துவிட போகிறது என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். அதற்கு எங்களிடம் நல்ல பதில் இருக்கிறது. வருடத்துக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக தருவோம். அதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரியாணி செய்து சாப்பிடலாம். என்னை சாப்பிட அழைத்தால் நானும் உங்கள் வீட்டுக்கு வருவேன்" என்றார்.

Assembly election election campaign namitha
இதையும் படியுங்கள்
Subscribe