Actress Nagma, Vijayadaran's new post

Advertisment

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அகில இந்திய மகளிர் காங்கிரசுக்கு 7 புதிய பொதுச்செயலாளர்களையும், 2 புதிய செயலாளர்களையும் நியமித்தார்.

நடிகை நக்மா, எஸ்.விஜயதாரணி எம்.எல்.ஏ., ஷோபனா ஷா, ஜர்ஜம் எடி, நீட்டு வர்மா சொயின், நேட்டா டிசவுசா, அனுபமா ரவத் ஆகியோர் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்.ஹசீனா சையத், சித்ரா சர்வாரா ஆகியோர், மகளிர் காங்கிரஸ் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.