Advertisment
அழகி போட்டி நடத்தும் நிறுவன உரிமையாளர் ஜோ மைக்கேல் பிரவீன், சென்னை எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் நடிகை மீரா மிதுன் மீது புகார் அளித்தார். இதையடுத்து, நடிகை மீரா மிதுன் மீது பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே சனம் ஷெட்டி, ஷம்மு ஆகிய நடிகைகள் புகாரளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.