Advertisment

நடிகை மீனாவின் கணவர் காலமானார்!

 Actress Meena's husband passes away

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில், பெங்களூரில் அவர்கள் வசித்த வந்த வீட்டுக்கு அருகே நிறையப் புறாக்கள் வளர்க்கப்படும் இடம் இருந்ததாகவும், அந்த புறாக்களின் எச்சம் கலந்த காற்றினை சுவாசித்ததால் வித்யாசாகர் கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

அதனைத் தொடர்ந்து அண்மையில் மீனாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றிலிருந்து மீண்ட வித்யாசாகருக்கு நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பொருந்தக்கூடிய நுரையீரல் கிடைக்காததால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில், அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

husband meena
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe