actress meena arrested in chennai

Advertisment

போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனாசென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சின்னத்திரை நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.