Advertisment

"மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்" - குஷ்பு விமர்சனம்!

actress kushboo pressmeet at chennai airport

Advertisment

'மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்' என்று நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வில் சேர்ந்தபிறகு,டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகை குஷ்புவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூக்களைத் தூவி குஷ்புவை வரவேற்ற பா.ஜ.க.வினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர்.

actress kushboo pressmeet at chennai airport

Advertisment

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, "சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். ஆறு வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்குத் தெரிந்ததா? காங்கிரஸில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டுச் செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை. எல்.முருகன் எடுத்த முயற்சியால்தான் நான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்" என்றார்.

Actress chennai airport kushboo PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe