ிு

Advertisment

பெண்களை இழிவாகப் பேசியதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு இந்து மத அமைப்புகள் மற்றும்பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் காவல் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருமாவளவனின் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து, குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்தப் போராட்டத்திற்கு சிதம்பரம் காவல்துறையினர் நேற்று இரவு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்பு-வை, முட்டுக்காடு அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.