Advertisment

hkj

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் முக்கிய தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு காவி வண்ணம் பூசுவது, காலணி மாலை போடுவது என தொடர் அத்துமீறல் நடைபெற்று வருகிறது. சிலர் தமிழகத்தில் பெரியார் சிலையை திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல் அகற்றுவோம் என்று கூறிய சம்பவங்களும் அரங்கேறியது.

Advertisment

இந்நிலையில், கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. திராவிடர் கழகத்தின் சார்பாக இந்தச் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்தச் சிலையின் மீது காவிப்பொடியை தூவிச் சென்றுள்ளனர். மேலும் செருப்பு மாலை ஒன்றையும் அணிவித்துள்ளனர். இந்நிலையில் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இந்தச் சம்பவத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதிராவிடக் கழகத்தினர் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை திராவிடர் கழகத்தினர் கைவிட்டனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் சிலை அவமதிப்பு தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கருத்தியல் ரீதியாக இல்லாமல், சிலைகளை அவமதிப்பது, தனிப்பட்ட காழ்ப்புணர்வு தாக்குதல்கள் என இம்முயற்சிகள் பதட்டத்தை உருவாக்குவதைத் தவிர வேறொன்றில்லை. நாட்டின் பிரதமர் அவர்கள் மீது எத்தனை வன்மம், கொடுஞ்சொற்கள்?அவரது படத்தை அவமரியாதை செய்வது என எத்தனை செயல்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தக் கருத்தை நடிகை குஷ்பு சுந்தர் ரீ-ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் எதிலும் பெரியார் பெயர் நேரடியாக பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.