நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்களை கவர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 16 பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் சேரனுக்கும், மீரா மிதுனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ABSOLUTELY UNBEARABLE TO WATCH ! மூணு வருஷமா கேட்குறாங்களே இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் "ஐயோ சாமி ஆளை வுடு " என்ற feeling தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? என்று பதிவிட்டுள்ளார்.