Advertisment

இனிமேல் காலையில் கோலம், காபி அப்புறம் இது தான்... திருக்குறள் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்! 

சமீபத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறள் அச்சிடப்படும். அதற்காக முதல்வரிடம் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் படமும் இடம்பெற பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் இடம்பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

actress

Advertisment

அதில், அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . டிவி , FM ரேடியோவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும் , ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம் தோறும் வீடு தேடி குறள் வருவது நல்ல விஷயம் தான்.

minister admk thirukural twitter kasthuri Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe