Advertisment

"பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு"- நடிகை கஸ்தூரி ட்வீட்!

actress kasthuri tweets political leaders

கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய இடங்களில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Advertisment

Advertisment

இதனை மேற்கோள்காட்டி பதிலடி கொடுத்துள்ள விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் விரைவில் வருகிறது. எழுச்சித் தமிழர் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. அப்போது தமிழ்நாட்டில் பூணூல் அணிய தடை விதிக்கப்படும். சனாதன ஒழிப்பின் முதல் பணி அதுவே!" என்று குறிப்பிட்டுள்ளார்.

வன்னிஅரசுவின் ட்விட்டை ரீட்விட் செய்துள்ள நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி, "என்னது பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு. உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக் கொள்ளுங்கள். உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலி ஆடுகளாக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Political Tweets kasthuri Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe