Advertisment

"என்னை இப்பயும் பேச விடல"...பிக் பாஸ் குறித்து கடுப்பான நடிகை கஸ்தூரி!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி ஆனார். பின்பு போட்டியிலிருந்து வெளியேறினார். அதற்கு பிக் பாஸ் வீட்டில் நடிகை கஸ்தூரி வெளியில் சமூக வலைத்தளங்களில் பேசுவது போல் பேசவில்லை என்ற குரல் எழுந்தது.

Advertisment

big boss

Advertisment

இது பற்றி கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது வரவேற்க பட வேண்டும் என்றும், நன்றாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அரசியல் பற்றியும், சமூக உணர்வு பற்றியும் பேசியது வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த பதிவிற்கு விஜய் ரசிகர் கேள்வி ஒன்றை கஸ்தூரியிடம் கேட்டுள்ளார். அதாவது, இதை ஏன் பிக்பாஸில் பேசவில்லை?’ என கேட்டார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, “நான் பேசினேன். ஏன் காட்டவில்லை என பிக் பாஸ் நடத்துபவர்களிடம் தான் கேட்கவேண்டும். அதோடு, என்னை இப்போதும் பேச விடல” என கூறியுள்ளார்.

Actress audio lanch function bigboss bigil kasthuri twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe