Advertisment

சர்ச்சை பேச்சு; நடிகை கஸ்தூரி விளக்கம்!

Actress Kasthuri explained about her Controversial speech

சென்னை எழும்பூர் பகுதியில், பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று (03.11.2024)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். மேலும், இதில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் அந்த இனப்படுகொலை நடக்கிறது. காஷ்மீரில் நடந்தது மட்டும் இனப்படுகொலை கிடையாது. அங்கு மொத்தமா வெட்டுனாங்க. உயிருக்கு பயந்து எல்லோரும் வெளியே வந்தார்கள். தமிழ்நாட்டில், பல பத்தாண்டுகளாக அறுபது ஆண்டுகாலங்களுக்கு மேலாக நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலை தான். பிராமணர்களின் உணர்வை அழிப்பதும் இனப்படுகொலை தான். ஒருவரின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அழிப்பதற்கான சமம் தான். எனக்கு அதில் ரொம்ப பயமாக இருக்கிறது.

Advertisment

ஆளுங்கட்சியினருக்கு நாளைக்கு கல்யாணம் செய்வதற்கு பிராமண பெண்கள் எப்படி கிடைப்பார்கள்?. நீங்கள் எங்கள் இனத்தை அழித்து, அடையாளத்தை அழித்தால் எப்படி பிராமண பெண்கள் இருப்பார்கள்?. யார் இறந்தாலும், கருமாதி செய்வதற்கு பிராமணர்கள் இருப்பார்களா? என்ற கவலை வந்திருக்கிறது. இந்த கவலை, இந்து சமுதாயத்தின் கவலை. பிறப்பதில் இருந்து இறப்பது வரை ஒவ்வொரு இடத்திலும் இன்றியமையாது அங்கமாக வகிக்க வேண்டிய ஒரு குலத்தை அழிக்கிறார்கள். திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கையாக இருக்கிறது. அதற்கான கொள்கை தான் பிராமண எதிர்ப்பு. கடவுள் இருக்கிறது என்று சொன்னால், இந்து சமுதாயம் ஒன்றுபட்டே இருக்குமே என்ற காரணத்தினால் தான் கடவுள் மறுப்பு பேசுகிறார்கள்.

Advertisment

ஒருவன், மற்றவனை ஒடுக்கினான், இழிவுப்படுத்தினான், என ஒவ்வொரு இடத்திலும் பொய்யான கதைகளை புணைந்து பேசுகிறார்கள். ஆரியர்களை, வந்தேறிகள் என்று சொல்கிறார்கள். யார் வந்தேறிகள்?. எப்பொழுதோ வந்த பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என்று சொல்ல, நீங்கள் யார்?. யார் தமிழர்கள்?. பிராமணர்கள் தமிழர்கள் இல்லையென்றால், வேறு யார் தமிழர்கள்?. அதனால், தானே ஒருத்தர் கூட தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க முடியவில்லை. நான் ஹைதராபாத்தில் தான் நான்கு வருடமாக இருக்கிறேன். நீங்கள் திராவிடர்களா என்று அவர்களை கேட்கும்போது, என்னது என்று கேட்கிறார்கள். உங்களை விட அதிகமாக தெலுங்கு பேசுகிறவர்கள் எங்க ஊர்ல தான் அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் சொன்னபோது, அப்படியா என்று பெருமையா கேட்கிறார்கள். அப்படி இங்கு ஐந்து பேர் அமைச்சரவையில் இருக்கிறார்கள்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று திருமா சார் கேட்டார். அவர் தெரிந்து சொன்னாரோ, தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. ஆதிக்குடிகளான பறையர்களுக்கு தான் பங்கு கிடையாது. தெலுங்கு பேசினால், பங்கு நிறைய கொடுக்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இந்நிலையில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்த தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (04.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “உண்மை என்பது ஒரே ஒரு உண்மைதான் இருக்கிறது. அந்த உண்மை இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒருத்தருடைய ஆதிவேரைப் பற்றிய பேசியதும் அவர்களுக்கு அதைப் பற்றிக் கொண்டு வந்து விட்டது. இத்தனை நாட்கள் இவர்கள் மற்ற சமூகங்களைத் தவறாகப் பேசிய போது பிராமணர்களை இழிவு படுத்தியபோது புலம்பெயர்ந்த உழைப்பாளர்களை எல்லாம் பாணி பூரி மற்றும் பீடா போடுபவர்கள் என்று சொல்லும் போது இங்கு இருக்கக்கூடிய மார்வாடி சமூகத்தினரையும், வட இந்திய மக்களையும் இவர்கள் கிண்டலாகப் பேசும் போது அதை மிகப்பெரிய மிகப் பெரிய புரட்சியாகப் பார்த்த மக்கள் தான் இன்றைக்கு அவர்களைப் பற்றிப் பேசும்போது பொய்யாகக் கையில் எடுத்துள்ளனர்.

Actress Kasthuri explained about her Controversial speech

இந்த பொய்க்கு நான் பயப்படுகிற ஆள் நான் கிடையாது. கஸ்தூரியைப் பற்றிய எத்தனை எத்தனையோ பொய்களை எல்லாம் பார்த்தாகிவிட்டது. இந்த பொய்க்குப் பயந்து வேற ஊரில் குடியேறவில்லை. இவர்களிடம் இருந்து தனிப்பட்ட தொந்தரவு வந்ததினால் ஆளுங்கட்சியாக இல்லாதவரைத் தனிப்பட்ட டார்ச்சரை என்னால் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் ஆளுங்கட்சியாக வந்த பிறகு, பதவி அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் விதவிதமான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கும் பொழுது இங்கே எதற்கு இருக்க வேண்டும் எனக்கு நானே புரிந்து கொண்டு ஒரு இடத்திற்குச் செல்கிறேன். ஆனாலும் நான் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவை மறைத்து விடவில்லை. எல்லோருடனும் நான் தொடர்பில் உள்ளேன். ஆனால் நான் இல்லாத போது இங்கு என்னெல்லாம் வருகிறது. அதைப்பற்றி எல்லாம் எதிர்கொள்ள எனக்கு நேரமில்லை. கஸ்தூரி ஒரு குடிகாரர் என்று ஊடகங்களில் எழுதுகின்றனர். நான் மது அருந்தும் பழக்கம் இல்லாத பெண்” எனத் தெரிவித்துள்ளார்.

controversy Chennai Speech kasthuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe