Advertisment

சென்னை அழைத்துவரப்பட்ட நடிகை கஸ்தூரி; போலீசார் தீவிர விசாரணை?

Actress Kasthuri brought to Chennai investigation by the police

பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

Advertisment

எழும்பூர் போலீசார், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பேசுவது; ஜாதி, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே கழகத்தை ஏற்படுத்துவது; அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல்; அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டதோடு செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானதாகத் தகவல்கள் வெளியானது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இவரது முன் ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் நடிகை கஸ்தூரியை நேற்று (16.11.2024) ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் இருந்து காவல்துறையினர் சென்னை அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை கஸ்தூரியிடம் வாக்குமூலம் பெற உள்ளனர். அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளார். அதன்பின்னர் நடிகை கஸ்தூரியைச் சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Egmore police Chennai kasthuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe