Advertisment

பழைய சம்பவங்களை கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சனை... பேட்டியின் போது நடிகை கண்ணீர்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, போலீசார் பற்றி பேசி போலீஸ் உடையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் நிலானி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரணடு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.

Advertisment

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி லலித்குமார் என்ற திரைப்படய உதவி இயக்குநருடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து இறந்தார். இதையடுத்து நிலானி தனது குழந்தைகளுடன் போரூர் அருகே குடியேறினார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்.

Advertisment

nilani serial actress

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பழைய சம்பவங்கள் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சினையில் சிக்கி உள்ளேன். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியதால் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2 குழந்தைகளோடு நான் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு வந்தேன். என் வாழ்வில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்துள்ளேன்.

என் நிலையை அறிந்து, சமூகவலைதளமான ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமானார் மஞ்சுநாதன். உதவி செய்வதாக கூறினார். வேலூரை சேர்ந்த மஞ்சுநாதனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது கஷ்ட நிலையை பார்த்து அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார். வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்தார். அடிக்கடி செல்போனில் பேசுவார். என்னை நேரடியாகவும் வந்து சந்தித்தார்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் அதற்கு சம்மதித்தேன். எனினும் அவரது பெற்றோரின் சம்மதம் பெற்றுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் தெரிவித்து இருந்தேன். அவர் திருமணம் ஆகாதவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்று பின்னர் தெரியவந்தது.

இதனால் அவரோடு பழகுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனக்கு அவர் ஒரு செல்போன் வாங்கி தந்தார். திடீரென எனது வீட்டிற்கு வந்த அவர் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த செல்போனில் இருந்த எனது படங்களை தவறாக பயன்படுத்துவேன் என்று கூறி மிரட்டினார்.

எனது குளியல் அறையில் கேமரா பொருத்தி என்னை படம் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறினார். அதனை இணையதளத்தில் வெளியிடுவேன்,எனது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த இந்த நேரத்தில்கூட என்னை செல்போனில் அழைத்து மிரட்டினார்.

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் புகார் கொடுக்க வந்தேன் என கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

Chennai police complaint serial actress nilani nila nilani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe