Advertisment

அந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை!

சில நாட்களுக்கு முன்பு நான் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருந்தார். இது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையானது. அதாவது, நடிகை ஆண்ட்ரியா ’ப்ரோக்கன் விங்க்’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீடு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. அப்போது அந்த புத்தகத்தில் சோகமாக பல வரிகள் உள்ளது என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமணம் ஆன ஒரு நபருடன் நான் உறவில் இருந்தேன். அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

Advertisment

actress

மேலும் இதிலிருந்து விடுபட சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். அதோடு, அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் "broken wings" புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது 'broken wings' புத்தகத்தை வருகிற 17ஆம் தேதியன்று தன்னுடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் அந்த திருமணமான நபரை குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த நபர் நடிகராக இருந்து அரசியல்வாதியானவர் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. தற்போது இருந்தே அந்த நபர் யார் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment
actor Actress book launch politics andrea
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe