Advertisment

என்னை காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதியா? நடிகை ஆண்ட்ரியா அதிரடி பதில்!

சில நாட்களுக்கு முன்பு நான் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருந்தார். இது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையானது. அதாவது, நடிகை ஆண்ட்ரியா ’ப்ரோக்கன் விங்க்’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீடு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. அப்போது அந்த புத்தகத்தில் சோகமாக பல வரிகள் உள்ளது என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமணம் ஆன ஒரு நபருடன் நான் உறவில் இருந்தேன். அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

Advertisment

actress

மேலும் இதிலிருந்து விடுபட சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். அதோடு, அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் "broken wings" புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும் அந்த நபரை பற்றி வெகு விரைவில் சொல்லப்போவதாக தெரிவித்து இருந்தார். இதனால் ஆண்ட்ரியாவுக்கு மிரட்டலும் புத்தகத்தை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் ஆண்ட்ரியா தற்போது அளித்துள்ள விளக்கத்தில், “நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் என்னை மறந்து வெளிப்படையாக பேசிவிட்டேன். எனது மோசமான காதல் குறித்து சில விஷயங்களை வெளிப்படுத்தியதும் உண்மைதான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. கற்பனையாக யாரோ அதை கிளப்பி விட்டு விட்டனர். என்னை காதலித்தவர் அரசியல்வாதியாக இருக்கும் நடிகர் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Launch books politics Actress tamil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe