/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_67.jpg)
முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்குத் தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஆடை' என்ற படத்தில் உடையில்லாமல் நடித்து அனைவரையும் அதிர வைத்தவர் நடிகை அமலாபால். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்துப் பெற்றவர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அமலாபாலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங், சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார். இந்த நிலையில், நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங், தன்னுடன் எடுத்த புகைப்படங்களையும், தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக வெளியிட்டுள்ள புகைப்படங்களையும் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், மேலும் அவர் மீது சிவில் அவதூறு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், சிவில் அவதூறு வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)