Advertisment

நடிகர் யோகி பாபு மீது இந்து மக்கள் முன்னணி புகார்!

இந்து மக்கள் முன்னணி நிறுவன அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் நேற்று முன் தினம் (04/02/2020) சென்னை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடிகர் யோகி பாபு மீது புகார் அளித்தார்.

Advertisment

actor yogi babu indhu makkal munnai compaint chennai commissioner office

அந்த புகார் மனுவில் "சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவரவுள்ள 'காக்டெய்ல்' என்கிற திரைப்படத்தில் தமிழ் கடவுளான முருகப்பெருமானை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் அந்த படத்தின் முன்னோட்ட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முருகன் வேடத்தில் யோகி பாபு மயிலுக்கு பதிலாக கிளியை போட்டு கிண்டலாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது. இது முருக பக்தர்களையும், தமிழர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதால் நடிகர் யோகி பாபு மீதும், படத்தின் இயக்குனர் மீதும் நடவடிக்கை வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

actor yogi babu indhu makkal munnai compaint chennai commissioner office

இதனிடையே திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை நடிகர் யோகி பாபு நேற்று (05/02/2020) திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor yogi babu Chennai Police Commissioner office
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe