Skip to main content

நடிகர் யோகி பாபு மீது இந்து மக்கள் முன்னணி புகார்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

இந்து மக்கள் முன்னணி நிறுவன அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் நேற்று முன் தினம் (04/02/2020) சென்னை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடிகர் யோகி பாபு மீது புகார் அளித்தார்.

actor yogi babu indhu makkal munnai compaint chennai commissioner office


அந்த புகார் மனுவில் "சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவரவுள்ள 'காக்டெய்ல்' என்கிற திரைப்படத்தில் தமிழ் கடவுளான முருகப்பெருமானை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் அந்த படத்தின் முன்னோட்ட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முருகன் வேடத்தில் யோகி பாபு மயிலுக்கு பதிலாக கிளியை போட்டு கிண்டலாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது.  இது முருக பக்தர்களையும், தமிழர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதால் நடிகர் யோகி பாபு மீதும், படத்தின் இயக்குனர் மீதும் நடவடிக்கை வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

actor yogi babu indhu makkal munnai compaint chennai commissioner office

இதனிடையே திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை நடிகர் யோகி பாபு நேற்று (05/02/2020) திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரவுடி கருக்கா வினோத் கைது; காவலர்களுக்குப் பாராட்டு

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Governor's House incident; Kudos to the guards

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த 25 ஆம் தேதி (25.10.2023) பிற்பகல் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீச முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

இதனையடுத்து அவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் கடந்த 26 ஆம் தேதி காலை (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத்தை துணிச்சலாக மடக்கிப் பிடித்து கைது செய்ததுடன், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் சிறப்பாகப் பணிபுரிந்த போலீசார் 9 பேரையும் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 

 

 

Next Story

ஆளுநர் மாளிகை சம்பவம்; ஆதாரத்துடன் காவல்துறை விளக்கம்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Governor's House incident Police description with evidence

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வைத்த குற்றச்சாட்டை தமிழக காவல்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜீவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன் என்ன நடந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

அப்போது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், “கருக்கா வினோத் தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகைப் பகுதிக்கு நடந்து வந்தார். அவரிடம் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்கள் இருந்தன. முதலில் கவரில் பெட்ரோல் பாட்டிலை எடுத்துவந்தவர், பின்னர் சட்டையினுள் மறைத்து எடுத்து வந்தார். கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முயலவில்லை. அவர் மாளிகையின் எதிர்புறம் இருந்து வீசியிருக்கிறார். ராஜ்பவன் ஊழியர்கள் சம்பவத்தை தடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவரைக் கைதுசெய்தது காவல்துறைதான்” என்றார்.

 

மேலும் டிஜிபி சங்கர் ஜிவால், “ஆளுநர் மாளிகைப் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. அங்கு 253 காவலர்கள் பணியில் இருக்கிறார்கள். உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதலில் பலர் வந்து குண்டு வீசியதாகத் கூறப்பட்டது. ஆனால் அவர் தனியாகத்தான் வந்தார். ஆளுநர் மாளிகை பக்கத்தில்கூட வரவில்லை. எதிர்ப்புறத்தில் இருந்துதான் வீசினார். நான்கு பாட்டில்களை எடுத்து வந்தார், இரண்டு வெடித்தது. கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் முழுமையான தகவல் தெரியவரும். சென்னை பாதுகாப்பான நகரம் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது” என்றார். மேலும் ஆளுநர் தருமபுரம் சென்றபோது, கற்களாலும், தடியாலும் தாக்கப்பட்டதாக கூறியது பொய் எனவும், அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு, ஆளுநர் வாகனம் தாக்கப்படவில்லை தமிழகம் அமைதி மாநிலமாக இருக்கிறது என காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.