Actor Wimal's wife as DMK candidate?

தமிழ் சினிமாவில் ‘பசங்க’, ‘களவாணி’ படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல். அதன் பின்னர், 15க்கும் மேற்பட்ட படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விமலின் சொந்த ஊர், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாஸ்கொம்பு கிராமம். இவரின் தந்தை நரசிம்மன், திமுகவின் பாரம்பரியக் கட்சிக்காரர். இருபது ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் சங்கம் சார்பில் மணப்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர்.

Advertisment

சில வருடங்களுக்கு முன் நடிகர் விமல், பிரியதர்ஷனி என்ற மருத்துவரை திருமணம் செய்தார். பிரியதர்ஷனி சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவர் பணி செய்து வருகிறார். இந்நிலையில், திமுக தலைமையில் மணப்பாறை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக தரப்பில் போட்டியிட விருப்பமனு செய்துள்ளார்.

Advertisment

நடிகர் விமல், அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்கு வங்கியாக உள்ளதால், தன் மனைவிக்கு சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவரின் குடும்பம் பாரம்பரிய திமுக குடும்பம் என்பதால் வாய்புள்ளது என்றார்.