தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதிப் பயணம்!

 Actor Vivek's final journey is about to start in a while!

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவரின் மறைவுக்குப்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்களும்நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக விவேக்கின் குடும்பத்தார் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில், இன்னும் சற்று நேரத்தில் விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்குஎடுத்துச் செல்லப்படஇருக்கிறது.தமிழக அரசின் சார்பில் காவல்துறை மரியாதையுடன்அவரது உடல் தகனம் செய்யப்படஇருக்கிறது.

actor Vivek Chennai passed away
இதையும் படியுங்கள்
Subscribe