நடிகர் விவேக் மறைவு... திருமா, சீமான் நேரில் அஞ்சலி! 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவரின் மறைவுக்குப்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்களும்நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜவைச் சேர்ந்த நடிகை குஷ்புஆகியோர் நேரில்அஞ்சலி செலுத்தினர்.

actor Vivek kushboo ntk passes away seeman thiruma valavan
இதையும் படியுங்கள்
Subscribe