நடிகர் விவேக் மறைவு! - கவுண்டமணி, யோகிபாபு உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி! (படங்கள்)

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.அவரின் மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் சூரிஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, தாமு, சிங்கம்புலி,யோகிபாபுஆகியோரும்நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், ரசிகர்களும்நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூடியுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.

passed away tamil cinema vivek
இதையும் படியுங்கள்
Subscribe