Advertisment

நடிகர் சங்க தேர்தல் மட்டுமில்லாமல் ஊடகங்கள் இதையும் கவனிக்க வேண்டும்... நடிகர் விவேக்

நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பிறகு நடிகர் விவேக் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில்,

Advertisment

என்னுடைய கடமையை நான் ஆற்றிவிட்டேன். ஊடகங்கள் இவ்வளவு தூரம் இந்த நடிகர் சங்க தேர்தலை முக்கியமாக மக்களிடம் எடுத்துச் செல்வதை நினைத்து நான் சந்தோசப்படுகிறேன். கலைஞர்களை போற்றுகிறீர்கள்ரொம்ப மகிழ்ச்சி. இதே நேரத்தில் தமிழ்நாட்டில் வேறுசில இடங்களில் வேறுசில விஷயங்கள் ரொம்ப சீரியசாக நடந்துகொண்டிருக்கிறது. அதையும் கொஞ்சம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Advertisment

actor vivek interview

நிறைய இடங்களில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை சிட்லபாக்கம்எரி, மணப்பாக்கம் ஏரியைபொதுமக்களே சுத்தம் செய்கிறார்கள்.அதேபோல் நிறைய பேர் வீட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தைசெய்து அதை வீடியோவாக எடுத்து போடுகிறார்கள். அதுவும்மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

நடிகர் சங்க தேர்தல் என்பது இரண்டாயிரத்து சொச்சம் பேர் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒரு சின்ன அமைப்பு. இருந்தாலும் இதில்பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இன்வால்வாகிஓட்டு போடுவதால் இதை மக்கள் பார்ப்பதற்கு ஆசை படுவார்கள் என்று நீங்கள் இதை மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். உங்களுடைய ஊடககடமையை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில்மக்கள் ஈடுபட்டிருக்கின்ற குளம் தூர் வாருதல், மரம் நடுதல், மழைநீர் சேகரிப்புத் திட்டம் இதையெல்லாம் கூட மக்களுக்கு எடுத்துச் சென்று பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

elections tamilcinema vivek
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe