Advertisment

மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!

மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ நடிகர் விவேக்கிற்கு திருவாரூரில் பல்வேறு தரப்பினரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

பிரபல நகைச்சுவை நடிகரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ விவேக், நேற்று (17/04/2021) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி மருத்துமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகில் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் வனம் என்னும் தன்னார்வ அமைப்பின் சார்பில், திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகளை நட்டனர். அதேபோல் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல இயக்கங்கள் இணைந்து நடிகர் விவேக்கிற்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். அலிவலம் பகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டு கூண்டு அமைத்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் பலரும் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.

actor Vivek Tiruvarur tribute
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe