Advertisment

நடிகர் விஷால் மீது அவதூறு பரப்பிய பெண் மீண்டும் கைது!

viswa

நடிகர் விஷால் பற்றி, அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதன்மூலம் பிரபலமானவர் விஸ்வ தர்ஷினி. ஏற்கனவே, நடிகை காயத்திரி சாய் என்பவரின் மகள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக எழுதியதால், அவர் மீது,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு, பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்த வழக்கில், நீண்ட காலம் தலைமறைவாக இருந்த விஸ்வ தர்ஷினியை, கடந்த 2019-ல் திருச்செங்கோட்டில் வைத்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து,மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பின்னர் அவர்மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, விசாரணை நிலுவையில் உள்ள அந்த வழக்கை, வாபஸ் வாங்க காயத்ரி சாயை பல சந்தர்ப்பங்களில் மிரட்டி வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக தன்னிடமிருந்து சில வீடியோக்களை திருடி, தடைசெய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் பதிவேற்றி வருவதாகவும்,சமீபத்தில் காயத்திரி சாய், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில்புகார் அளித்திருந்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் நேற்றுவிஸ்வதர்ஷினி கைது செய்யப்பட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

vishal vishwadharshini
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe