actor vishal

கடந்த 2016ஆம் ஆண்டு சேவைவரித் துறையினர் நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர் ஒரு கோடிக்கும் மேல் சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி சேவைவரித்துறையினர் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.

Advertisment

இதனால் விஷாலுக்கு எதிராக சென்னை எழும்பூர் பெருநபர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கிய நீதிமன்றம், சேவைவரித்துறை தொடர்பாக கேள்விகளை எழுப்பியது. அப்போது விஷாலின் வழக்கறிஞர், வழக்குக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக இருந்தால் ஏற்கனவே சேவைவரித்துறை அனுப்பிய சம்மனுக்கு ஏன் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பியது. மேலும் சேவைவரி செலுத்தியதற்காக ஆவணம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியது. அதற்கு விஷால் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து அக்டோபர் 26ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது, அன்றைய தினம் விஷால் ஆஜராக வேண்டும் எனறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விஷால் ஆஜரானார்.