/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/F-_YLwQXsAAGxA1_29.jpg)
நடிகர் விஷால் திரைப்படங்களில் நடத்துக்கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில்புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால்,வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாகசெய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத்தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்; மக்களுக்கு போதுமான வசதியில்லை என்று கூறிய விஷால், அதன் காரணமாகவே தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டில் நடக்கும் சட்ட மன்ற தேர்தலில் களம் காணப்போவதாக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஷாலும் 2026 சட்ட மன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)