நடிகர் விஷால் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. நடிகர் விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisment

actor vishal

இதுகுறித்து விஷால் தரப்பும், நடிகை அனிஷா தரப்பும் எந்த ஒரு அதிகார தகவலும் இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி வேகமாக பரவி வருகிறது. இந்த வதந்தியை தடுக்க விஷால் தரப்பும், நடிகை தரப்பும் முயற்சி எடுத்தால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.