
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விமல் தயாரிப்பில்கடந்த 2018ஆம் ஆண்டு'மன்னர் வகையறா' என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பிற்கு நடிகர் விமல் கோபி என்பவரிடம் 4.50 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். வாங்கிய 4.50 கோடி ரூபாய் கடனுக்கு விமல் தரப்பு கொடுத்த காசோலை திரும்பி வந்த நிலையில், தயாரிப்பாளர் கோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே ஆஜராகி இருந்தார். சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் யாரும் முன் வரவில்லை. இறுதியில் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று நடிகர் விமல் தரப்பு மனு செய்தது. அந்த மனு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ததை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தொடங்கினார். வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விமல் செயல்பட்டதாக 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Follow Us