சர்கார் திரைப்பட விழாவில் நடிகர் விஜய் எல்லோரும் தேர்தலில் நின்று விட்டு சர்கார் அமைப்பார்கள். நாம் சர்கார் அமைத்து விட்டுத் தேர்தலில் நிற்கப்போகிறோம். புழுக்கத்துக்குப் பின் மழை வருவது போல, நெருக்கடி நெருங்கும்போது அடிபட்டு நல்லவர்கள் முன்னே வருவார்கள் அதுதான் இயற்கை. அப்படி வரும் ஒருவருக்குக் கீழே ஒரு சர்கார் வரும். நான் முதல்வரானால் நிஜத்தில் நடிக்கமாட்டேன்” என்று அரசியல் வசனங்கள் பேசி அரசியல்கட்சிகளுக்கு பெரிய ஷாக் கொடுத்தார். நடிகர் விஜயின் அரசியல் அதிரடி பேச்சு அரசியல் கட்சியினர் இடையேயும், பொதுமன்றங்களிலும், டிவி விவாதங்களிலும் பரபரப்பாக பேசும் பொருளாக மாற்றியது. ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியையே தமிழக முழுவதும் பரபரப்பாக பேச வைத்தார். நடிகர் விஜய்.

VIJAY

Advertisment

இப்படி நாளுக்கு நாள் விஜய் கிராப் ரேட் ஏறிக்கொண்டிருந்த நிலையில் சென்னையில் தி.மு.க. மேடையில் பேச்சாளர் வே.மதிமாறன். தளபதி என்றால் என்று எங்கள் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ. ஆனா பிறகு தான் முதலமைச்சர் என்கிற அடிப்படை அறிவு இல்லாதவர் கூட தளபதியா என்று ஸ்டாலின்முன்னிலையிலே நடிகர் விஜயை பேசி தள்ளிய பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் டி.டி.வி தினகரனை திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குடமுருட்டி கரிகாலன் சந்தித்து சால்வை அணிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Actor Vijay's trusted youth team leader TTV  Meets

Advertisment

திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குடமுருட்டி கரிகாலன். இவர் திருச்சி மாவட்ட தி.மு.க. துணை செயலார் குடமுருட்டி சேகரின் தம்பி. குடமுருட்டி சேகர் தி.முக. ஆட்சியில் தன் தம்பி விஜய் மன்றத்தில் இருந்தாலும் அப்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் உதவியுடன் இந்து அறநிலை துறையில் அரசாங்க வேலையை வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஆரம்ப காலம் முதல் விஜய் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்து ஏகப்பட்ட பொருட் செலவு செய்து விஜய் திரைப்படங்களுக்கு திருச்சியில் செலவு செய்து கொண்டாடியவர், 15 ஜோடிகளுக்கு திருச்சியில் நடிகர் விஜய் தலைமையில் இலவச திருமணம் செய்து நடிகர் விஜயின் நம்பிக்கை பெற்றவர். இப்படி விஜய் சமீபத்தில் சர்கார் திரைப்பட ஆடியோ ரீலிஸ்க்கு கூட திருச்சியில் வேனிலும், பஸ்ஸிலும் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றவர்.

 TTV

இதை விட முக்கியமாக ஜெ. ஆட்சியில் இருக்கும் போது கூட்டணி பேச்சு வார்த்தை வரும் போது நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் நிற்க யாருக்கு விருப்பம் என்று கேட்ட போது முதல் ஆளா எழுந்து நின்று நான் நிற்கிறேன். எவ்வளவு செலவானலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி நடிகர் விஜய்க்கு நம்பிக்கை கொடுத்து அதிர்ச்சியடைய வைத்தவர். இப்படி விஜயின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த குடமுருட்டி கரிகாலன் நேற்று கரூர் உண்ணாவிரத்திற்கு கலந்து கொண்டு திருச்சி விமானநிலையத்திற்கு வந்த டி.டி.வி தினகரனை விமானநிலையத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் குடமுருட்டி கரிகலான் சால்வை அணிவித்தார்என்பதுதான் தற்போது திருச்சியில் பரபரப்பு அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது.