நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக நடிகர் விஜயை தான் தமிழக அரசியலுடன் சேர்த்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கும். தமிழக அரசியல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்காத விஜய், தனது ரசிகர்கள் மூலம் நற்பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி அத்தோடு தமிழகம் அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் வருமானவரி சோதனை, அலைகழிப்பு என நெருக்கடிகள் அதிகமானது விஜய் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மார்ச் 15 மாவட்டத் தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் நடைபெற்றது. அதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முடிவில் பத்திரிகையாளர்களிடம் மாவட்ட தலைவர் ராஜா “தமிழக திரையுலகில் விஜய்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவர் அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.