Skip to main content

நடிகர் விஜய் சேதுபதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Actor Vijay Sethupathi ordered to appear in court

 

பெங்களூரு விமான நிலையம் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மகா காந்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த நவம்பர் மாதம் 2- ஆம் தேதி அன்று இரவு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை எதேச்சையாக சந்தித்ததாகவும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க முற்பட்ட போது, தன்னை சாதிப் பெயரைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்தியதாகவும் மகா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும், ஆனால் விஜய் சேதுபதியை தான் தாக்க முற்பட்டது போல அவதூறு பரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக ஜனவரி 4- ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக, நடிகர் விஜய்சேதுபதிக்கும், அவரது மேலாளர் ஜான்சனுக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று (14/12/2021) உத்தரவிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.