முரளிதரன் படத்தில் நடிப்பதை தவிருங்கள்: பாரதிராஜா!

actor vijay sethupathi director bharathi raja

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பதை நடிகர் விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் எப்போதும் ஈழ மக்கள் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள். நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கை துரோகிதான். திலீபனின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்தால் திரைத்துறையினர் இலவசமாகப் பணியாற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த திரைப்படம் தொடர்பாக மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ்நிறுவனங்கள்ஏற்கனவே விளக்கமளித்திருந்தது. அதில், 'முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படம் தான் இது' என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

actor vijay sethupathi director bharathi raja
இதையும் படியுங்கள்
Subscribe