
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி பெங்களூருவுக்கு சென்றிருந்தார். அப்போது பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் மகா காந்தி என்பவரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை எதிர்த்து நடிகர் விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (17/02/2022) விசாரணைக்கு வந்த போது, "பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக, நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை" விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.