'பிகில்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் புத்தாண்டை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், பொங்கல் பண்டிகை அன்று செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

Actor Vijay Poster issue

இந்நிலையில் கறுப்பு நிறச் சட்டை அணிந்து மக்கள் கூட்டத்தில், அமைதியாக இறுக்குமாறு வாயில் விரல் வைத்தபடி வெளியான செகண்ட் லுக் போஸ்டர் படத்துடன் ' 234 தொகுதியும் சைலண்டா இருக்கணும்; 2021இல் நாங்கதான் இருக்கணும். மக்கள் பணி செய்யவரும் 'மாஸ்டர்' ' என குறிப்பிட்டு சென்னை ஆதம்பாக்கம் விஜய் ரசிகர்கள் ஓட்டியுள்ள போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.