/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay (1).jpg)
சென்னை அருகே உள்ள பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தீடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். விரைவில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விஜய் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.
விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ. சந்திரசேகர் கூறிய நிலையில், ஆலோசனை நடைபெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)