ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என திரைப்பட நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் அரசியல் பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தைதொடர்ந்து தமிழகத்தில் பல்வேறுஅரசியல்தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் இனி வரவேற்பு பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்றங்களுக்கு ஒரு அறிவிப்புஒன்றை கொடுத்துள்ளார். அதில்,
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது. பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.