லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய்க்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்குள் நடந்து வந்த மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.மேலும்இன்று மாலை 05.00 மணி வரை மட்டுமே படப்பிடிப்பை நடத்த என்.எல்.சி நிர்வாகம் அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisment

actor vijay income tax investigation

ஏற்கனவே விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான சென்னை தி.நகர் வீடு, தேனாம்பேட்டைஅலுவலகம் உட்பட 20 இடங்களில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், விஜயை விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment