நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர் நாளைய முதல்வர் என விளம்பரப்படுத்தியுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் விஜயக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள், பிளக்ஸ்களும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாளைய முதல்வரே என்று பேனர்கள் வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரபடுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

sellur raju vijay
இதையும் படியுங்கள்
Subscribe