Skip to main content

பிச்சைக்காரர்கள் எல்லாம் கேவலம் இல்ல சார்... ஊரடங்கில் குடும்பத்தோடு சிக்கி ஊர் திரும்பிய விஜய் மக்கள் இயக்கத் தலைவி ஓப்பன் டாக்!


 

actor vijay fans association thiruchendur to chennai


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் தற்போது 40 நாட்களுக்கு பிறகு சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பி வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தின் உள்ளேயே வெளி மாவட்டத்திற்குச் சென்று சிக்கிக்கொண்டு சொந்தவூருக்கு வர முடியாமல் தப்பிப் பிழைத்து வந்தவர்களின் கதையோ இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.


நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி உள்பட 11 பேர் மத்தியச் சென்னையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 40 நாட்களாகச் சென்னைக்குத் திரும்ப முடியாமலும், அடிப்படை வசதிகள் கிடைக்காமலும் தவித்தனர். இதனால் அவர்கள் திருச்செந்தூர் சாலையிலும், பேருந்து நிலையத்திலும் கோவிலும், கிடந்து தவித்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவி தேவியிடம் இது குறித்துப் பேசினோம். "நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை... கடந்த மார்ச் மாதம் என் மகள் ரம்யாவுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மார்ச் 23- ஆம் தேதி மகள், மற்றும் மருமகன், மாமியார், என 11 பேருடன் சேர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றோம்.
 

 

actor vijay fans association thiruchendur to chennai

 

கோவிலுக்குச் சென்ற அன்றைக்கே ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் வேக வேகமாக பஸ் பிடித்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் வந்தோம். ஆனா அங்க பஸ் எதுவும் இல்லனு சொன்னதால எங்களுடைய வாழ்க்கை அந்த பஸ் ஸ்டாண்ட் ஓரத்தில் நகர்ந்தது.

என்ன பண்றதுன்னு தெரியமா எங்க மத்தியச் சென்னை மாவட்டத் தலைவர் பூக்கடை குமாருக்கு போன் பண்ணி தலைமையிடம் சொல்லி நாங்கள் திரும்பி சென்னை வருவதற்கு வழி இருக்கான்னு கேட்டேன், அப்படியே கொஞ்சம் பணம் இருந்தா அனுப்புங்கன்னு கேட்டேன், அண்ணே நான் மக்கள் இயக்கத்திற்கு மகளிர் அணிச் சார்பாக நான் கொடுத்த 12,000 ரூபாயை திரும்பக் கேட்கவில்லை, இது எனக்குத் தனிப்பட்ட முறையில் கேக்குறேன் சொல்லி கேட்டேன் உடனே கொஞ்ச நேரம் கழித்து.. அவரே எனக்குப் போன் பண்ணி எனக்குப் பணம் வேணும்னு என் நண்பர்கள் கிட்ட கேட்டேன் யாரும் இந்த நேரம் பணம் இல்லைன்னு சொல்லிட்டாங்க, என்று கைவிரித்தார்.
 

actor vijay fans association thiruchendur to chennai

 

பிச்சைக்காரர்கள் எல்லாம் கேவலம் இல்ல சார்… அவங்களுக்குக் கொடுத்த சாப்பாட்டை எல்லாம் நாங்க வாங்கிச் சாப்பிட்டு நாட்களைக் கடத்தேன், பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் படுத்து இருந்த எங்களைப் பார்த்த ஒரு அதிகாரி நான் ஊருக்கு அனுப்ப வழி பண்றேன். அதுவரை திருச்செந்தூர் கோவிலில் போய்த் தங்க வச்சார். அது சிறை மாதிரி ஆயிடுச்சு, வெளியவே வரல, புளியோதரை.. தொடர்ந்து எங்களால சாப்பிட முடியல, அதைச் சாப்பிட்ட சிலருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு, எங்க சொந்தகார பையன் விக்ரம் அவன் இங்க இருக்கப் புடிக்காம எங்களை விட்டு ஓடிட்டான், அவனைத் தேடி அலைய அலைஞ்சு, கண்டுபிடிச்சும், இதற்கு இடையில் எங்களை ஊருக்கு அனுப்புறேன் சொன்ன அதிகாரி கடைசி வரை வரவே இல்லை, இங்கே இருந்தா அவ்வளவு தானு திரும்ப நாங்க எல்லோரும் வெளியே வந்தோம். எங்களுடைய பரிதாப நிலையைப் பார்த்து இறக்கப்பட்டு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்த காய்கறி கடைக்காரர் என்னோட லாரி எடுத்துட்டு வரேன் ஆனா தாசில்தாரிடம் அனுமதி மட்டும் வாங்கிக் கொடுங்கன்னு சொன்னார்..ஆனா… அந்தத் தாசில்தார் இப்ப எல்லாம் எங்கையும் அனுப்ப முடியாது என்று ரொம்பக் கடுமையாக பேசி அனுப்பிட்டார்.

எங்க எல்லோருக்கும் அழுகையே வந்திடுச்சு. இதற்கு இடையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் புஸி ஆனந்த பேசினார் 5 பேர் வரைக்கு அனுமதி கொடுப்பாங்கன்னு சொல்றாங்க, நான் மாவட்ட ஆட்சியர் கிட்ட பேசுறேன் எனச் சொன்னார். அதன் பிறகு அவரும் கடைசி வரை பேசவே இல்லை.

 

actor vijay fans association thiruchendur to chennai

 

http://onelink.to/nknapp


எங்களுக்கு அப்படியே வாழ்க்கையே வெறுத்து போச்சு, வேற வழியில்லாம நடந்தே போயிடலாமான்னு கூடத் தோணுச்சு.. கடைசியா கலெக்டர் காலில் போய் விழுந்திடலான்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்ப மத்தியச் சென்னை மாவட்ட பொருளாளர் சிவபிரகாஷம் போன் பண்ணினார்.. அவரை வீடியோ காலில் பேச சொல்லி எங்களோட பரிதாப நிலையை வீடியோவில் பார்த்தார்… அண்ணே.. இப்படி நடுத்தெருவில் அனாதையா நிக்கிறோம்.. நடந்தே கலெக்டர் ஆபிசுக்கு போகபோறேன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டேன். அவர் உடனே… கொஞ்ச வெயிட் பண்ணுங்க… திருச்சி ராஜா கிட்ட சொல்லி தூத்துக்குடி மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் கிட்ட பேச சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னார்.

சொன்ன மாதிரி கொஞ்ச நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் உதவியாளர் போனில் பேசினார். பேசின உடனே ஒரு வேன் வந்தது.. அதில் ஏற்றி அவரோட மண்டபத்தில் கொண்டு போய்த் தங்க வச்சார். அங்க போனவுடன் தான் உயிரே வந்தது… எங்களைக் காப்பாத்தினது.. இந்த அரசாங்கமோ, அதிகாரியோ இல்ல,. எங்க விஜய் தான்… தூத்துக்குடி மாவட்ட தலைவர் பில்லா ஜெகன்.. கடவுள் மாதிரி வந்து ஒரே நாளில் யார் கிட்ட பேசினாருன்னு தெரியல, உடனே அனுமதி கடிதம், வாங்கி வேன் ரெடி பண்ணி, 27,000 ரூபாய் கொடுத்து புதுமணத் தம்பதிகளுக்கு 5,000 ரூபாய் கொடுத்து உதவி பண்ணி எங்களைப் பத்திரமாக உயிரோ மீட்டு அனுப்பி வைத்தார். விஜய் ரசிகர்கள் எங்கையாவது பிரச்சனையில் இருந்தா விஜய் ரசிகர்கள் தான் காப்பாற்றுகிறார்கள்" என்று மகிழ்ச்சி பொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.